அன்னை
ஸ்ரீ அழகுநாச்சியாம்மன் துனை
என்நாட்டிலும் நன் நாடாம்
சோழ வள நாட்டில் முசுகுந்தாபுரி எனும் முசிறி
மாநகரின் கண் அகண்ட காவிரியின் வடக்கு கரையின் அருகில் அன்னை ஸ்ரீ அழகுநாச்சியம்மன்
கோவில் எழுந்துதருளி உள்ளது
சுமார் 600 ஆண்டுகளுக்கு
முன்பு கானியாளப்பிள்ளையாகிய அம்மையப்ப காராளர்
காவிரியில் நீராட சென்றுள்ளார் அப்பொழுது மேல் திசையில் இருந்து நீரில் பேழை ஒன்று
மிதந்து வருவதை பார்த்து அந்த பேழையில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆவல் கொண்டு
அந்த பேழையை திறந்த பார்த்த பொழுது மின்னல் ஓளிப்போல் மேல் நோக்கி சென்று வானில் அசாரீரி
வாக்காக "நான் தான் அழகுநாச்சியம்மன். நான் மலையாள தேசத்தில்லிருந்து வந்திருக்கிறேன்.
வரும் வழியில் யாரும் என்னைப்பார்க்கவில்லை, நீயே எனது முதல் பிள்ளை நானே உனக்கு குலதெய்வம்
என்னை வணங்குவது உன் கடமை உன் குலத்தை காப்பது என் கடமை ஆகவே எனக்கு கோவில் அமைத்து
பரிபாலனம் செய்வதாக காவேரி கரையை அடித்து சத்தியம் செய்" என்றதாம். அதை கேட்ட
பயந்து நடுங்கி மெய் சிலிர்த்து மண்டியிட்டு ஏற்றுக்கொள்வதாகச் சொல்லிக் கரையை அடித்து
சத்தியம் செய்தாராம். மேலும் அவர் அன்னையிடம் தாயே நீ கூறியபடி நான் சத்தியம் செய்துவிட்டேன்,
தாங்கள் கூறியபடி எமக்கு குலதெய்வமாக இருந்து காப்பது சத்தியமானால் என் கையில் அடித்து
சத்தியம் செய்ய வேண்டும் என்றாரம். அருப சொருபியான அன்னை ஸ்ரீ அழகுநாச்சியம்மன் கையில்
அடித்து அவ்வாறே சத்தியம் செய்ததாம். அதன் பிறகு அவ்விடத்தில் கோவில் அமைத்து வழிபட்டு
வந்ததாக வரலாறு.
பிரசித்தி பெற்ற தேவி அன்னை
ஸ்ரீ அழகுநாச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை பூஜித்துக்கொண்டும் பூர்வீக தொழிலான
வேளான்மை செய்து கொண்டும் சகல ஐஸ்வர்யங்களுடன் காணியாளப்பிள்ளை என்ற பட்டத்துடன் முசிரியில்
மிகச்சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.
அவ்வாறு இருக்கையில் கோவிலின்
கிழக்கே பருவ மழை காலங்களில் இயற்கையின் சீற்றத்தால் அல்லிக்குழி என்ற இடத்தில் காவிரிக்கரை
உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அதை சரி செய்யும் பொருட்டு பல முறை முயற்சித்தும்
கரை உடைப்பை சரி செய்ய இயலவில்லை. இதனை சரி செய்யும் பொருட்டு ஊர் பெரியவர்கள் தெய்வத்தை
வேண்டி கேட்டுக்கொண்டபோது சாமியாடிய பூசாரி அருள்வாக்காக கானியாளபிள்ளையின் பிள்ளையை
காவு கொடுத்து கட்டினால் கரை நிற்கும் எனக் கூற ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கானியளப்பிள்ளை
சம்மதித்தார் பிறகு தனது குழந்தையை காவு கொடுக்க விரும்பாமல் இரவோடு இரவாக ஊரை விட்டு
வெளியேறினார் அவ்வாறு செல்கையில் தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த தனது 3 வயது பென்பிள்ளையான
பொன்மருதாய்யம்மாள் மறதியாக விட்டு சென்றனர். மறுநாள் காலையில் கூடிய ஊர் பெரியவர்கள்
காவிரிக்கரையில் உடைப்பு ஏற்பட்ட அல்லிக்குழியில் அக்குழந்தையை கொண்டு தெய்வ வாக்கினை
நிறைவேற்றினர்.
முசிறி தெய்வம் தேவி அன்னை
ஸ்ரீ அழகுநாச்சியம்மன், மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ பெரியாண்டவர், ஸ்ரீ சன்னாசிபீடம்,
ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ காத்தவராயர், ஸ்ரீ மதுரைவீரசுவாமி, ஸ்ரீ காமாட்சியம்மன்,
ஸ்ரீ ஆதி அழகுநாச்சியம்மன், செம்பாயி அம்மன், கன்னிமார் அம்மன் ஆகிய தெய்வங்களின் அருளோடு
வாழ்ந்து கொண்டு வந்தார்கள், வருகின்றார்கள் மேலே சொன்ன சங்கதிகள் அனைத்தும் ஓலைசுவடிகள்
வாயிலாக அறியப்பட்டவை.
வேண்டியவர்க்கு வேண்டிய வரத்தை அருளும் தேவி ஸ்ரீ
அன்னை அழகுநாச்சியம்மன் வணங்கும் பக்தர்கள் முசிறி மட்டுமில்லாமல் திருச்சி, நமக்கல்,
கரூர், குளித்தலை, சேலம், திண்டுக்கல் மாவட்டம் மற்றும் பல மாவட்டத்தை சேர்ந்த மக்கள்
தங்கள் குல தெய்வமாக வேண்டி வணங்கி வழிபாடு செய்து வருகின்றனர்.
இச்சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில்
புதிய நூதன இராஜகோபுரம் சிற்ப சாஸ்திர முறைப்படி நிர்மானிக்கப்பட்டு சுதை வேலைகள் யாவும்
சிறந்த சிற்ப வேலைப்பாட்டுடன் நிகழ்வுற்று, புதிய முகப்பு மண்டபம் மற்றும் திருமதில்
சுவர் திருப்பணிகள் யாவும் வியத்தகு வண்ணம் நிறைவுற்று ஸ்வஸ்திஸ்ஸ்ரீ நிகழும் மங்களகரமான
ஹேவிளம்பி வருடம் மாசி மாதம் 14ஆம் நாள் (26.02.2018) திங்கட்கிழமை ஏகாதசி திதி, புனர்பூச
நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் சுப லக்கினத்தில் மஹா கும்பாபிஷேகம்
வேத் சிவகாம முறைப்படி மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அவ்விழாவில் உலகெங்கும் உள்ள அழகுத்தாயின் பக்தகோடிகள் தாங்களும் தங்கள் சுற்றம் சூழ வருகை புரிந்து விழாவினை சிறப்பிக்க வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தகவல்களுக்கு கைபேசி எண்: 96008 47709
